--- --:--:-- --

குழந்தை கடத்தலை தடுக்கும் புதிய வசதி..!

2

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்முறையாக குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு மகப்பேறு பிரிவுக்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட கருவுற்ற பெண்கள் வந்து செல்கின்றனர். இங்கு மாதத்திற்கு சராசரியாக 450 குழந்தைகள் பிறக்கின்றன.

 

பிறக்கும் குழந்தைகளுக்கு ரேடியோ அதிர்வெண்பட்டை பொருத்தப்படுகிறது. அதைப்போல் தாய்க்கு சிவப்பு நிற அட்டையும் உறவினர்களுக்கு பச்சை நிற அட்டையும் வழங்கப்படுகிறது.

 

இந்த அட்டை இல்லாமல் குழந்தையை தூக்கிச் சென்றால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் மூன்று வாசகங்களிலும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வருஷத்துக்கு குழந்தையின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon