ரயில் நிலையத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு..!
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 பெண்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த பெண்கள் நடனமாடிய வீடியோ காட்சி வெளியான நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து ரயில்வே போலீசார் அனுப்பியுள்ளனர்.





