--- --:--:-- --

நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்து..! தோழி பலி..!

3

மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. யாஷிகா ஆனந்த்தின் தோழி மற்றும் நண்பர்கள் 2 பேர் என நாலு பேர் வந்து கொண்டிருந்தனர்.

 

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நள்ளிரவில் ஒரு மணியளவில் அதிவேகமாக வந்த காரை சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. அங்கிருந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் சில நண்பர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon