--- --:--:-- --

ஜூலை -26 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு தள்ளிவைப்பு..!

4

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலானது. பெரும்பாலான மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப்படாமல் இருக்கிறது.

 

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு வருகிற 26-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரொனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் தினந்தோறும் 20 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே இந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்படுவது சரிவர இருக்காது என்பதால் ஜூலை 26-ஆம் தேதியில் நடைபெறவிருந்த நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல் முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon