வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்..!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினர் வரும் 26-ஆம் தேதி நடத்த உள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதிய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுவதுடன் விவசாயிகளுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என பிரதமருக்கு அனுப்பிய கூட்டறிக்கையில் இந்த கட்சிகள் கூறியுள்ளன.






