--- --:--:-- --

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக உளவு ஊர்தியை அனுப்பும் நாசா..!

9

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்று செவ்வாய் கிரகத்திற்கு உலவு ஊர்தியை ஏவ உள்ளது. பெர்சிவரன்ஸ் என்று பெயர் வைக்கப் பட்டுள்ள இந்த உலவு ஊர்தி ஏற்கனவே நாசா அனுப்பிய ஊர்திகளை விட தொழில்நுட்பத் திறன் வாய்ந்தது. கார் அளவில் இருக்கும் இந்த ஊர்தி செவ்வாயில் தரையிறங்கி பாறையை துளையிட்டு மாதிரிகளை சேகரிக்கும்.

 

அட்லாஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் இந்த உலவு ஊர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காகவே இந்த உளவு ஊர்தியை நாசா அனுப்புகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon