--- --:--:-- --

ஓட்டு போடலைன்னா நல்லசாவு வராது… சாபமிட்ட எம்எல்ஏ மன்னிப்பு கேட்டார்!

MLA

இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா, கண்டிப்பா நல்ல சாவு சாக மாட்டீங்க என்று நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

தமிழக சட்டசபைக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ பாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஸ்கர், அண்மையில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

 

இந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், மனசாட்சினு ஒன்னு இருந்தா இலைக்கு ஓட்டு போடுங்க, நீங்க இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா, கண்டிப்பா நல்ல சாவு சாக மாட்டீங்க.. என்று சாபம் விடாதக்குறையாக பேசினார். அவரின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

 

இதனிடையே, தனது பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தை லேட்டாக உணர்ந்த எம்.எல்.ஏ. பாஸ்கர், அதற்காக வருத்தம் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், எனது உயிரினும் மேலான நாமக்கல் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். எனது குடும்பம் இரண்டு தலைமுறையாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். திமுக மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள், அம்மாவின் 10 ஆண்டு கால தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகினற்னர்.

 

கடந்த 20.03.2021 அன்று மோகனூர் டவுன் காந்தமலை கோவிலில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சிகள் எனக்கு தொடர்ந்து அளித்த வந்த மனஅழுத்தத்தின் காரணமாக திமுக-வினர் இரட்டை இலைக்கு வாக்களிக்கவிட்டால் நல்ல இருக்க மாட்டார்கள் என்று சொன்னேன்.

 

அன்றைய தினம் நான் சொன்ன வார்த்தைகள் என்னால் பயனடைந்த திமுக-வினரை மனதில் வைத்து தான் பேசினேன். இது குறித்து உண்மையில் மனம் வருந்துகிறேன். ஒருவேளை என்னுடைய பேச்சு யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon