--- --:--:-- --

‘இரட்டை இலைக்கே ஓட்டு’ பேனர் அசைத்து ஈ.பி.எஸ்.சை வரவேற்ற ‘அரியர் பசங்க’!

3333

நாகையில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடிக்கு “அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே” என்று மாணவர்கள் பேனர் அசைத்து வரவேற்றது, காண்போரை சுவாரஸ்யப்படுத்தியது.

 

அதிமுக கூட்டணியில் அமைச்சர்கள் தங்களது தொகுதியிலேயே பிரசாரம் என்று முடங்கிக் கிடக்க, முதல்வர் பழனிச்சாமி மட்டுமே தமிழகம் முழுவதும் ஒரே நபராக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். பல இடங்களில் பேசிப்பேசி அவரது தொண்டை கட்டிக் கொண்டுள்ளது. முதல்வரின் பிரசார நிகழ்ச்சிகளில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன.

 

நேற்று பிரசாரத்தின் போது விவசாயிகளின் டிராக்டரை ஓட்டிச் சென்று முதல்வர் வாக்கு சேகரித்தார். அதேபோல், அவரது பிரசார கூட்டத்தினுள் மாடு புகுந்தபோது தொண்டர்கள் அதை அடித்து விரட்ட முற்பட்டனர். ஆனால் முதல்வர் பழனிச்சாமியோ, பசு தெய்வம் – விவசாயிகளின் நண்பன். அடிக்காதீர்கள் என்று சொல்லி மாட்டை வணங்கினார்.

 

இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, மொட்டைமாடியில் நின்று இளைஞர்கள் பலர், அரியர் பசங்க நாங்க என்ற பதாகைகளுடன் நின்று கொண்டு, எங்கள் ஓட்டு அதிமுகவுக்கே என்று பதாகை காண்பித்து வரவேற்பு அளித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

நாகையில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் இளைஞர்களின் உற்சாக குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் 15 க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நின்றிருந்தனர்.

 

பதாகைகளில் ஒவ்வொரு எழுத்தாஅக “எடப்பாடியார்” என்று மேல் வரிசையில் பிடித்தபடியும், அடுத்த வரிசை மாணவர்கள் “அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே” என்று எழுதப்பட்ட பதாகைகளை காட்டி வரவேற்பு தந்தனர். இதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி வாய் விட்டு சிரித்தார்; உற்சாகத்துடன் மாணவர்களை நோக்கி கை அசைத்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon