மூதாட்டியிடம் செயின் பறித்து சென்ற மர்மநபர்..!
புதுச்சேரியில் ரிக்ஷாவில் சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் தங்கச் சங்கிலியை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி ஆசிரமத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு ரிக்ஷாவில் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ரிக்ஷாவில் சென்று வந்தபோது பாட்டி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஆசிரமத்தில் வழக்கறிஞர் பெரியகடை போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.







