பெண் குழந்தையை புதரில் வீசி சென்ற மர்ம கும்பல்..!
பொள்ளாச்சி அருகே பெண் குழந்தையை புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி மகாகணபதி நகரில் புதரில் இருந்த பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.
இதனையடுத்து பொதுமக்களின் தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் அவ்விடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




