வங்கதேச கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்..!
வங்கதேச கரன்சியிலிருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தந்தை என்று அழைக்கப்படும் முஜிபுர் ரஹ்மானின் படத்தை வங்கதேச கரன்சி நோட்டுகளில் இருந்து நீக்க நாட்டரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேசத்தின் 20, 100, 500 மற்றும் ஆயிரம் டாக்காக்களில் இருந்து அவரது படத்தை நீக்கி புதிய நோட்டுகளை அச்சடிக்க உள்ளதாக வங்கதேசம் மத்திய அரசு வங்கி அறிவித்துள்ளது.





