--- --:--:-- --

மதுபோதைக்கு அடிமையான தாய்..! 2 வயது குழந்தை தவிப்பு..!

2

புதுச்சேரியில் மது போதைக்கு அடிமையான தாயால் பரிதவித்த இரண்டு வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர் குழந்தையின் பெரியம்மாவிடம் கடிதம் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்த 40 வயது பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் அந்தப் பெண் மதுவுக்கு அடிமையாகி தனது 2 வயது ஆண் குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று அந்த பெண் மது போதையில் சாலையில் படுத்து கிடந்ததால் குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உடன் சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். மேலும் குடிபோதையில் இருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Right Menu Icon