6 மாதங்களுக்கு மேலான பீர்.. டாஸ்மாக்கிற்கு பறந்த உத்தரவு..!
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பாக பீர் பானம் விற்பனை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி கடைகளில் முதலில் வந்தது முதலில் இருப்பது என்ற முறையில் விற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவை பட்டியல் தயாரிக்கும் பொழுது விற்பனையாகும் சரக்குகளுக்கு ஏற்ப தேவைப்பட்டியல் தயாரிக்க வேண்டும் என தலைமை அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து ஆறு மாதத்திற்கு பின் கெட்டுப் போகும் தன்மை உடையது என்பதால் அவற்றை ஆறு மாதங்களுக்கு பின்னர் விற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேற்பட்ட பீர் வகைகள் இருப்பில் இருந்தால் அது குறித்து மாவட்ட மேலாளருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






