--- --:--:-- --

எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்ற அச்சிடப்பட்ட நோட்டீஸ்..!

10

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்ற அச்சிடப்பட்ட நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த அதிமுகவினர் இரவு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் திரண்டனர். சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

 

Right Menu Icon