ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா உறுதியானதால் அதிர்ச்சி..!
102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் 16 மாநிலங்களில் உள்ள 20 மாவட்டங்களில் 150 சதவீதம் தீவிரமடைந்து உள்ளது என்றார்.
மகாராஷ்டிராவில் கொரொனா புதிய உச்சத்தை எட்டி உள்ளதாகவும் நாட்டில் கொரோனாவால் மோசமடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கை கழுவுவது ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.






