--- --:--:-- --

ஆண்களை நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து பணம் கொள்ளை..!

2

பேஸ்புக் மூலம் ஆண்களுக்கு நட்பு வலைவீசி நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து அதை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

 

நன்றாகப் படித்து நல்ல ஊதியத்துடன் இருப்பவர்களை குறிவைக்கும் இந்த கும்பல் முதலில் நட்பாக பழகி பின்னர் காதலிப்பது போல் உணர்வை ஏற்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி எதிர்த்தரப்பில் இருப்பவரையும் நிர்வாணமாக பேசவைத்து வீடியோவாக பதிவு செய்து கொள்கின்றனர்.

 

பின்னர் இந்த வீடியோவை உறவினர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்றும், சிறுக சிறுக பணம் பறிக்கின்றனர்.

 

கல்லூரி மாணவர், மருத்துவ மேற்படிப்பு மாணவர் என இவர்களின் மோசடி வலையில் சிக்கியுள்ள ஆண்களின் எண்ணிக்கை நீடித்து போவதாகவும் கூறிய போலீசார் அடையாளம் தெரியாத பெண்களின் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon