--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மிதமான மழை..!

3

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தபோதும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.

 

மேலும், வரும் மார்ச் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

 

மேலும், வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Right Menu Icon