நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!
மத்திய பிரதேசத்தில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரம் அருகே ஆர்த்தி புஷ்பாக்கா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சராசரி எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை உள்ளதாக கூறிய மருத்துவர்கள் நான்கு கால்கள் என்பது உடல் குறைபாடு என்றும், சில கருக்கலில் கூடுதல் வளர்ச்சி அதிகமாக ஏற்படுவது உண்டு என கூறினர்.
தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது என்பது உறுதியானால், கூடுதல் கால்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்படும் என்றும் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





