அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – இருவருக்கு நீதிமன்ற காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத 2 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர்.
அப்போது குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது





