டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல்! இன்று கொரொனா பரிசோதனை!
காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 51 வயதான கெஜ்ரிவால் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். இதன் பின்னர் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
லேசான காய்ச்சல் இருப்பதால் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களையும் ரத்து செய்துள்ள கெஜ்ரிவால் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருப்பதால் கவனமுடன் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடல்நிலையைப் பொருத்து இன்று கெஜ்ரிவாலுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.







