கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஜெ அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. கொரொனா தொற்றுக்குள்ளான திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் இரண்டாம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டிருந்தது.
உடல்நிலை தேறிய நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் அளவு 40 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மருத்துவமனையை வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதயத்தின் செயல்பாடு மோசம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் தேவைப்படுவதாகவும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசம் அடைந்துள்ளதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.







