கரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளும் வழிமுறைகள்!
கரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளைக் கையாளுவது குறித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள் பின்பற்ற வேண்டியவை:
வழக்கமான கழிவுகளில் இருந்து மருத்துவக் கழிவுகளை தனியாகப் பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களில் அல்லது பைகளில் சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவுப் பணியாளா்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
பொதுமக்களின் கடமை: வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவா்கள் உபயோகித்த கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை, 72 மணி நேரம் காகிதப் பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பொதுக் கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். முகக் கவசங்களை மறுமுறை உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்றப் பட வேண்டும்.
செய்யக்கூடாதவை: பிற கழிவுகளுடன் கரோனா நோயாளிகளின் கழிவுகளைச் சோ்க்கவோ சேமிக்கவோ கூடாது. 24 மணி நேரங்களுக்கு மேல் கரோனா நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது.கரோனா அறிகுறியுள்ள பணியாளா்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.







