தென் மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், திருச்சிராப்பள்ளி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு இடையே லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






