பெண்கள் கொடுமை செய்தால் ஆண்கள் புகார் அளிப்பதில்லை.. எழுந்த கோரிக்கை..!
தமிழக சட்டமன்றத்தில் சட்டத்துறை மீதான கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குடும்ப வன்முறை சம்பவத்தை பெண்களைப் போலவே ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அதிக அளவில் பெண்கள் தான் புகார் அளிப்பதாகவும் ஆண்கள் ஒருவர் கூட பாதிக்கப்படுவதாக புகார் வரவில்லை என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் துரை சந்திரசேகர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் வேண்டுமானால் புகார் அளிக்கலாம் என்றார்.





