--- --:--:-- --

திருமுருகன்பூண்டி 7 வது வார்டு நெசவாளர் காலனியில் 2 வது கட்டமாக மாஸ் கிளீனிங் ..!

5

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தற்போது பூண்டி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தநிலையில் 15 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் 7 வது வார்டில் உள்ள பல பகுதிகளில் சாக்கடை கால்வாய் அடைத்துக் கொண்டும், சாக்கடை கால்வாய் மற்றும் ரோட்டின் இரு பக்கமும் புற்கள் உயரமாக வளர்ந்திருந்தன.

 

இதனையடுத்து  திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் உத்தரவுப்படி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நேற்று 7 வது வார்டில் உள்ள காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் முதல்கட்டமாக முழுமையாக தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

 

இதனையடுத்து இன்று காலை 7 மணி முதல் 2 வது கட்டமாக முழுமையாக தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.                  இதில் நெசவாளர் காலனி  விரிவாக்கம் வீதியில் மெயின் ரோடு மற்றும் குறுக்கு வீதிகளில், சன்னதி வீதி,  ரேடியஸ் அவென்யு ஆகிய பகுதிகளில் மாஸ் கிளீனிங் என்னும் முழுமையாக தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

 

இந்த பணியின் போது சாக்கடை கால்வாய்க்கு இருபுறமும் வளர்ந்து இருந்த புற்கள் வெட்டப்பட்டது. மேலும் தேவையில்லாமல் வளர்ந்து இருந்த செடிகளையும்  அகற்றினர்.

 

இப்பணியினை பூண்டி பேரூராட்சி  திமுக நகர செயலாளர் பாரதி, பூண்டி நகர திமுக துணைச் செயலாளர்  மூர்த்தி, 7 வது வார்டு கிளை செயலாளர் ராமச்சந்திரன்,அ.தி.மு.க நிர்வாகிகள் மோகன், கோபால் கம்யூனிஸ்ட் கட்சியின் நஞ்சப்பன் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

 

முன்னதாக அனைத்து வீடுகளிலும் மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர் வெட்டிய புற்களை டிராக்டர் மூலம் அகற்றினர். இதனையடுத்து 7வது வார்டு நெசவாளர் காலனி பகுதி மக்கள் தூய்மை பணியாளர்களுக்கும், உதவி செய்த  திமுகவினருக்கும்  நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Right Menu Icon