--- --:--:-- --

முழு ஊரடங்கில் திருமணங்களுக்கு அனுமதி..!

5

நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது திருமணங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

திருமண நிகழ்ச்சியில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon