மோசமான வானிலையால் விளைநிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!
பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் சத்தியமங்கலத்தில் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டது.
பெங்களூரை சேர்ந்த மாறன் என்பவர் உடல் நலம் சரியில்லாத தன் மனைவியை கொச்சியில் உள்ள மருத்துவமனை அழைத்து செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கடம்பூர் மலைப் பகுதிக்கு மேல் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த பொழுது பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக சரியான சிக்னல் கிடைக்காததையடுத்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.
ஹெலிகாப்டர் விளைநிலத்தில் தரை இறங்குவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகே சென்று பார்த்த போது ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியில் இறங்கி வந்ததை கண்டு நிம்மதி அடைந்தனர்.





