எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 10 ஜோடிகளுக்கு திருமணம்..!
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 10 ஜோடிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. ஆனந்தபுரத்தில் கல்வாரி செக்கல் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை இயங்குகிறது.
இந்நிலையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரில் இந்த டிரஸ்ட் மூலம் படித்து முன்னேறிய 10 ஜோடிகளுக்கு இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எச்ஐவி பாதித்தோருக்கு உதவும் நலம் விரும்பிகளுக்கு விருந்து வழங்கியதோடு டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் மற்றும் தங்கும் விடுதி வைக்கும் திறந்து வைத்தார்.






