வரலாற்றிலேயே முதன்முறையாக மெரினா கடற்கரைகளும் மூடல்!
வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ், திருவான்மையூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும்வரை கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் இருக்கும் கடைகளை மூடும் நடவடிக்கையிலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் காவலர்கள் ஈடுபட்டனர்.
கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தடுக்க உட்புற சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







