பூங்காவில் அமைக்கப்பட்ட சறுக்கு விளையாட்டில் பலருக்கு காயம்..!
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் தொடங்கப்பட்ட சறுக்கு விளையாட்டு சில மணிநேரங்களிலேயே மூடப்பட்டது. பூங்காவில் மிகப்பெரிய அளவிலான சறுக்கு விளையாட்டு தொடங்கப்பட்டது. வழக்கமான சறுக்கு விளையாட்டு போல் அல்லாமல் செங்குத்தான முகடுகள் மற்றும் அலைகளை போல இருந்தது.
இதில் சறுக்கி விளையாடியவர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வடிவமைப்பு குறைபாடு காரணமாக சறுக்கு விளையாட்டு உடனடியாக மூடப்பட்டது. இந்த நிலையில் ஆபத்தான இந்த சறுக்கு விளையாட்டில் பலர் உருண்டு விழுந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.





