--- --:--:-- --

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது..!

3

ணிமங்கலம் அருகே இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து மிரட்டிய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன்.

 

இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த லாரி உற்பத்தி செய்யும் தனியார் ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்துள்ளார். இவர் தங்கியுள்ள அந்த வீட்டில் இளம்பெண்கள் சிலர் வாடகைக்கு குடியிருந்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

 

பெண்கள் குளிப்பதை சரவணன் வீடியோ பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அன்று இளம் பெண் ஒருவர் அறையில் குளிப்பதை செல்போனில் சரவணன் வீடியோ எடுத்ததை கண்டு அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

 

அப்பொழுது அந்த பெண்ணை வீடியோ வெளியிட்டு விடுவேன் என சரவணன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் பெண்கள் சிலர் குளிப்பதை தொடர்ந்து வீடியோ பதிவு செய்து வந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon