சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் குத்தம் பாக்கத்தில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டவனின் குடும்பத்தினரை தாக்கிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





