--- --:--:-- --

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்..!

1

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து விளக்கமளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

 

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களில் பெருமைகளை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கிடைக்காததற்கு அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி சிதம்பரனார், பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருக்கும்.

 

அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

அதில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வுக்கு தெளிவான விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். அந்த விதிகளின்படி ஊர்திகள் தேர்வு செய்யப் படுவதாகவும் விளக்கமளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon