குஜராத்தில் போலி நீதிமன்றம் அமைத்து சம்பாதித்த நபர் கைது..!
எல்லாவற்றிலும் போலிகள் உண்டு. ஆனால் குஜராத்தில் ஒரு நீதிமன்றமே போலியாக செயல்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. சாமுவேல் கிறிஸ்டி என்பவர் தன்னை நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் என கூறி வழக்குகளில் தீர்ப்பளித்து வந்தார்.
இது குறித்து நீதிமன்றம் போலி அலுவலகம் அமைத்து வழக்குகளை விசாரித்து வந்த அவர் பெரும் தொகையை கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து வந்ததும் காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. போலி நபர் கிருஷ்ணனை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.






