--- --:--:-- --

துணி துவைத்த பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டிய நபர் கைது..!

12

திருப்பூர் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் முதல் வீதி பகுதியில் வசித்து வரும் பெண் 18.08.2025-ம் தேதி மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றபோது தனது வீட்டிற்கு அருகே தனியார் கம்பெனி நடத்தி வரும் பெரியசாமி(49) என்பவர் ஆடை இல்லாமல் ஆபாசமாக நின்று எதிரே உள்ள மாடியில் துணி துவைத்த பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார்.

 

பின்னர் மேற்கண்ட பெண் மத்திய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து ஆபாசமாக சைகை காட்டிய மேற்கண்ட எதிரி பெரியசாமி என்பவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Right Menu Icon