--- --:--:-- --

சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு..!

9

த்தாலி தலைநகர் ரோமில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை பாஜக விமர்சித்துள்ளது.

 

ரோமில் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச அமைதி மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் மத தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தலைமையிடமாகக் கொண்ட சாண்டியாகோ என்ற கத்தோலிக்க அமைப்பு இந்த மாநாட்டை நடத்த உள்ளது.

 

இந்த அழைப்பு மேற்கு வங்காளத்திற்கு பெருமை தரும் தருணம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்காமல் தேசவிரோத செயல்களில் ஈடுபடக்கூடிய மம்தாவை எவ்வாறு அழைக்கலாம் என பாஜக விமர்சித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon