2 கிலோ எடையில் வளர்ந்துள்ள எலுமிச்சை பழம்..!
பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் இருக்கும். ஆனால் கர்நாடகாவில் தேங்காய் அளவில் காணப்படும் எலுமிச்சை பழம் இரண்டு கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பர்கூர் அருகே சரோஜ் என்பவர் அந்த பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார்.
அந்தச் செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்ததுடன் அதில் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் உள்ளது. மற்ற 2 எலுமிச்சைகளும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது.







