--- --:--:-- --

அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை செய்த இருவர் கைது..!

8

னியார் சிகிச்சை மையம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை மாவட்ட மதுக்கூரில் மாதவன் மற்றும் அறிவழகன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முறையாக அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்து எவ்வித சான்றுகளும் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த மாதவன் என்பவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் அறிவழகன் என்பவரும் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது.

 

இது தவிர அவரது கிளினிக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வருமானவரித் துறையின் ஆய்வில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon