--- --:--:-- --

மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா பானர்ஜி..!

1

மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகள் குறித்து மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். ஒடிசாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் மேற்கு வங்கம் சென்று பிரதமரை வரவேற்க மரபுப்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வரவில்லை.

 

ஆளுநர் மட்டுமே அதிகாரிகளுடன் பிரதமரை வரவேற்று புயல் சேதங்களை பார்வையிட அழைத்துச் சென்றார். இதன்பின் பிரதமர் மோடி தலைமையில் மேற்கு வங்க முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

ஆனால் இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்காள சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்பட்டிருந்தது மம்தா பானர்ஜிக்கு கோபம் உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. பிரதமரின் கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக சென்ற மம்தா பானர்ஜி பிரதமரிடம் சில மனுக்களை கொடுத்து விட்டு உடனடியாக வெளியேறியுள்ளார்.

 

உயிர் சேதங்களை நேரில் பார்வையிட திகா பகுதிக்கு செல்ல வேண்டி இருந்ததால் பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த தரமற்ற அரசியலால் மேற்குவங்காளம் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என பாஜக தேசிய தலைவர் விமர்சித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon