மனைவியின் கொடுமை தாங்காமல் மாயமான காவலர்..!
சென்னையில் பணியாற்றும் காவலர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்காமல் மாயமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பின்ன மூட்டு விளையை சேர்ந்த ஜெனிகுமார் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவரை சொத்துக்களை மனைவி பெயருக்கு எழுதி வைக்குமாறு வலியுறுத்திய மாமனார் குடும்பத்தினர் அடித்து உதைத்ததாகவும் செருப்பால் தம்மை அடித்ததாகவும் கூறி 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார் .
காணாமல் போன காவலரை அருமனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.







