மதுரை மண்டல டாஸ்மாக்கில் உயரதிகாரிகளையும், ஊழியர்களையும் மிரட்டி பணியவைத்து ஆட்டி படைக்கும் விற்பனையாளர்..!
கள ஆய்வில் அதிர்ச்சி தகவல் அதிகாரிகளின் மனக்குமுறல்..!
மதுரை, மாவட்டம் திருமங்கலம், தாலுகா ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் அரசு டாஸ்மார்க் கடையில் (கடை எண் 5595) வி.ராமசாமி என்பவர் விற்பனை பணியாளராக கடந்த 20 வருட காலங்களாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் திருமங்கலம் பகுதியில் உள்ள 148 டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களிடம் மாதம் தோறும் ரூ. 5000 வரை லஞ்சம் கேட்பதாகவும் கொடுக்க மறுத்தால் பணியிட மாற்றம் செய்வதாகவும், பணியிட மாற்றம் கேட்பவர்களிடம் ரூ. 50 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாகவும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்புகார் குறித்து விசாரிக்கும் பொழுது விற்பனையாளர் ராமசாமியை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் மீது வேண்டுமென்றே அவதூறுகளை பரப்புவதாகவும் அவருடன் வேலை செய்யும் விற்பனையாளர்களையும், சூப்பர்வைசர்களையும் மிரட்டுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வெளிவந்துள்ளது.
அதில் குறிப்பாக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபானங்களை 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகமாக விற்பதாகவும் இது பற்றி புகாரின் பேரில் அதிகாரிகள் வந்து விசாரணை செய்யும் போது இவர் பெயரை குறிப்பிடாமல் இவர் கூட பணி செய்யும் பணியாளர்களின் பெயரை குறிப்பிட்டு அவரைப் போலவே கையெழுத்துயிட்டு அவர்களை விசாரணை வட்டத்துக்குள் சிக்க வைத்து விட்டு இவர் தப்பித்து விடுவதாகவும், யார்? பெயரை குறிப்பிட்டு அவர்களை போல போலியாக கையெழுத்து இடுகிறாரோ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது அதனால் அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.
இதனால் தன் பணியை செய்ய முடியாமலும், அலுவலகத்திற்கும் விற்பனை செய்யும் கடைக்கும் மாறி, மாறி அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் தவறே செய்யாமல் பழியை சுமந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார் இவர் மேல் எழுந்துள்ளது.
இதைப்பற்றி உயர் அதிகாரிகள் விசாரித்தால் அவர்கள் மேல் அவதூறுகளை பரப்புவது மிரட்டல் விடுவது போன்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் எனவும், கூறப்படுகிறது. இவர் செய்யும் முறைகேடால் பல விற்பனையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் கூறுகின்றனர்.
பணியில் இருக்கும் பிற விற்பனையாளர்களிடம் நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேட்டு நீங்கள் நடக்க வேண்டும் இல்லை என்றால் ஒரேடியாக ஆளை தூக்கி விடுவேன் நான் மதுரை மாவட்ட விற்பனையாளர் சங்கத் தலைவராக இருப்பதாகவும் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும் இருக்கிறேன் அதனால் நான் சொல்வதை தான் மதுரை எஸ்ஆர்எம் மற்றும் உயர் அதிகாரிகள் கேட்பார்கள் என அனைவரையும் மிரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.
இவர் பல மோசடிகளில் ஈடுபட்டு அது வெளியே யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அதிகாரிகள் மேல் அவதூறு பரப்புவது, சக பணியாளர்களை மிரட்டுவது, அவர்களைப் போல் போலியாக கையெழுத்துயிட்டு அவர்களை வழக்கில் சிக்க வைப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார் எனவும் கூறுகின்றனர்.

அவர் மேல் ஏன்? இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்? இவரை யார்? இயக்குகிறார் என அடுக்கடுக்கான கேள்விகள் நம் முன்னே தோன்றுகிறது.
இது சம்பந்தமாக உதவி மேலாளரை அணுகும் போது வி.ராமசாமி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விசாரித்து வருகிறோம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. உண்மையாகவே இவர் சங்கத் தலைவராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருக்கிறாரா இல்லை சங்கத்தின் பேரில் அனைவரையும் மிரட்டுகிறாரா என ஆய்வு செய்ய வேண்டும்.
அதிகாரிகளையும், பணியாளர்களையும் தொடர்ந்து இதுபோல் மிரட்டுவது, அச்சுறுத்துவது, அவதூறு பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடும் டாஸ்மார்க் விற்பனையாளர் வி.ராமசாமி மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து மற்ற பணியாளர்களின் வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக அரசின் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பிரச்சனையை தலையிட்டு சம்பந்தப்பட்டவரின் மீது நடவடிக்கை எடுப்பர்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






