மதுரை ஜல்லிக்கட்டு: 15,000 காளைகள் மற்றும் 5,000 வீரர்கள் முன்பதிவு!
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆன்லைன் மூலம் சுமார் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அறிவிப்பின்படி, கடந்த ஜனவரி 7-ம் தேதி மாலை 5 மணி முதல் ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர். இதன்படி, மொத்தம் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





