--- --:--:-- --

மதுரை – சென்னை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கம்..!

3

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதற்காக மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இன்று ஒருநாள் மட்டும், முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

சென்னை எழும்புரில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் வழியாகச் சென்று மாலை 6.30 மணிக்கு மதுரையை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளது.

 

மறுமார்க்கமாக இன்று இரவு 7.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் புறப்படும் எனவும், திண்டுக்கல்லுக்கு இரவு 8:17 மணிக்கும், திருச்சிக்கு இரவு 9:30 மணிக்கும் வரும் எனவும் கூறியுள்ளது.

 

நள்ளிரவு 1:05 மணிக்கும் விழுப்புரத்துக்கு வரும் சிறப்பு ரயில், இறுதியாக அதிகால 3:20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon