சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




