--- --:--:-- --

தந்தைக்காக தேம்பி தேம்பி அழும் சிறுமி..! வைரல் வீடியோ..!

8

ரு தந்தை தனது மகளை பற்றி கவலைப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு சிறுமி தனது தந்தைக்காக கவலைப்பட்டு விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் உள்ளத்தை கரைய வைக்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் கண்களில் கண்ணீருடன் அழும் சிறுமியிடம் அவரது தாய் ஏன் அழுகிறாய் என கேட்கும் பொழுது அந்த சிறுமி தந்தை நீண்ட நேரம் சாப்பிடாமல் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தன் மனம் வலிப்பதாக கூறுகிறார்.

 

பெண்களை சுமையாக கருதுபவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று ஒரு பத்திரிக்கையாளர் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த சிறுமி தன் தாயிடம் தன் அப்பா வேலைக்கு செல்வதற்கு முன் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார். அதன்பின் இரவு உணவு மட்டும் சாப்பிடுகிறார்.

 

மதியம் சாப்பாடு சாப்பிடுவதில்லை. மதியம் வெறும் வயிற்றில் இருக்கிறார் எனக் கூறி அழுதுள்ளார். தந்தையின் வேலைப்பளு காரணமாக அவரால் மதிய உணவு எடுத்துக் கொள்ள முடியவில்லை என சிறுமியின் தாய் சிறுமிக்கு புரிய வைக்க முயற்சித்தும் அனைவரும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் அல்லவா..அப்படி என்றால் தந்தையால் மட்டும் ஏன் சாப்பிட முடியாது எனக்கூறி அழுதுள்ளார்.

Right Menu Icon