சிறுமியும், காதலனும் யாருமில்லா நேரத்தில் வீட்டில்..! ஆத்திரத்தில் இளைஞரை கொலை செய்த சிறுமியின் வீட்டார்!
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கௌதம். பொள்ளாச்சியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த கவுதம் தினமும் தங்கள் பகுதி வழியாக பள்ளிக்கூடம் சென்று வரும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளார். 16 வயதே ஆகும் அந்த மாணவியும் கௌதமனிடம் நட்பாக பழக தொடங்கியுள்ளார்.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் ஊரடங்கு காரணமாக குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருந்தாலும் மாணவியை சந்திக்க முடியாமல் இருந்துள்ளார் கௌதம். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதியை கௌதமனுடன் போனில் பேசி அந்த மாணவி தாய், தந்தை, சகோதரர் அனைவரும் வெளியில் சென்று விட வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யமஹா வாகனத்தில் மின்னல் வேகத்தில் மாணவியின் வீட்டிற்கு சென்ற கவுதம் சிறுமியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்துவிட்ட மாணவியின் தாய் என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவருக்கும், அண்ணனுக்கும் தகவல் தெரிவிக்க அவர்களுடன் மாணவியின் சகோதரரும் வீட்டிற்கு வந்து விட தங்கள் வீட்டு பள்ளி சிறுமியின் மனதை கெடுத்து விட்டதாக கூறி அந்த இளைஞரை கிரிக்கெட் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்ததால் கௌதம் உயிர் இழந்து விடக்கூடாது என அஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் உயிரிழந்ததால் அந்த சிறுமியின் சகோதரர், தந்தை மற்றும் உறவினரை கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
படிக்கின்ற வயதில் வகுப்பு பாடங்களை மறந்த மாணவியின் விபரீத காதல் ஆசையால் ஒரு குடும்பமே கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவிகள் தாங்கள் விரும்பிய இளைஞரை காதலித்தாலும் சட்டத்தின்படி அவர்கள் அறியாமல் செய்ததாக கருதப்படும். இளைஞர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலும்.
அவர்களை நம்பி உருக உருக காதலிப்பதாக நினைத்து ஊர் சுற்றினால் வீணாக உயிரிழக்கும் விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.







