--- --:--:-- --

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எடப்பாடியை முன்னிறுத்தி ஜெயிப்போம்!!” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார்

7

ம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை முன்னிறுத்தி வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடியை முன்னிறுத்தி அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதியாக தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத பல புதுமைகளை இந்தத் தேர்தல் களம் காண உள்ளது.

 

இதுவரை நடந்த தேர்தல்களில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலமான ஆளுமைகள் ஆளுமைகள் தேர்தல்களில் வலம் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக கருணாநிதி Vs ஜெயலலிதா என்ற போட்டி நிலவியது. கடந்த தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மறைந்த நிலையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த ஆளுமை இல்லாத வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? என்பதற்கு இந்தத் தேர்தலில் விடை காணப்பட உள்ளது. இதனால் இந்த வெற்றிடத்தை பஞ்சமில்லாமல் தலைவர்கள் எண்ணிக்கை இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. திமுகவில் கருணாநிதி இடத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார். அதிமுகவில் கட்சிக்குள் ஏற்பட்ட முதல்வர் வேட்பாளர் போட்டியில் ஓபிஎஸ் Vs இபிஎஸ் இடையே முட்டல் மோதலாகி கடைசியில் எடப்பாடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இடையில், டிடிவி தினகரன், கமல், சீமான் ஆகியோரும் முதல்வர் கனவில் கோதாவில் குதிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியும் குதிக்கத் தயார் என அறிவிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவுடன் பிணக்கு ஏற்பட்டால், விஜயகாந்தும் மீண்டும் தனியாக முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் காணலாம் எனக் கூறப்படுகிறது.

 

இப்படி ஆளாளுக்கு முதல்வர் கனவில் தேர்தலில் குதித்தாலும், போட்டி என்னவோ திமுக, அதிமுக இடையே தான் என்பது நிச்சயம். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினரிடமும், தமிழக மக்களிடமும் கடந்த 40 ஆண்டுகளாக பரிச்சயமானவர். அதிமுகவில் எடப்பாடி செல்வாக்கு பெற்றிருந்தாலும், மக்களிடம் எடுபடுவாரா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. ஆனாலும் கடந்த மூன்றரை ஆண்டுகால முதல்வர் பதவியில் எடப்பாடியார் பெயர் பட்டி , தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டது என்றே கூறலாம்.

 

தற்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை முன்னிறுத்தி தான் பிரச்சாரம் இருக்கக் போகிறது, ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு திரண்டது போல் மக்கள் அலை திரளுமா? என்பது கேள்வியாக இருக்கும் நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று கூறியது இது தான்.

 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி இதற்கு முன் அதிமுக எப்படி வெற்றி பெற்ற தோ அதே போன்று இந்தத் தேர்தலில் எடப்பாடியை முன்னிறுத்தி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறியுள்ளார். மேலும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு பாஜக தரப்பில் எதிர்ப்புகளும், அடுத்து பாஜக இடம்பெறும் கூட்டணி அரசுதான் என்றும் கூறி வருவதற்கும் அமைச்சர் உதயகுமார் செக் வைத்துள்ளார். சட்டசபைத் தேர்தல்களில் எப்போதுமே இரு திராவிடக் கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணி என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon