தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை..!
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சி பாறையில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.



