குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை..!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுதந்திரமாக நடமாடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து வனத்துறையினர் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.






