பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதல் ஜோடியை பெண்வீட்டார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம்..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரி முன்பு காதல் ஜோடியை பெண்வீட்டார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகவதி குமார் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் தொண்டாமுத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய தகுந்த ஆவணங்களுடன் இவர்கள் வந்துள்ளனர்.
அப்போது அங்கு திடீரென வந்த பெண்ணின் அண்ணன் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வீசிசியுள்ளார். மேலும் பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தங்களின் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று விட்டனர் இந்த சம்பவம் யாவும் பத்திரப் பதிவாளர் முன்னிலையில் நடைபெற்று உள்ளது.






